மனைவிகளை தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு தப்பிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து!

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் மனைவிகளை தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார்.

டெல்லியில் மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் தப்பி ஓடி வசித்து வரும் இந்தியர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய விசாரணையை மத்திய பெண்கள் நல அமைச்சகம் மேற்கொண்டது.

நோடல் ஏஜென்சியுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணையில் 45 இந்தியர்கள், மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வசிப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி இன்று கூறுகையில், மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வசித்து வரும் கணவன்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக புதிய சட்ட மோசோதா ஒன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேலவையில் அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாடுகளில் வசித்து வரும் 45 இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்