இறுதிக்கட்டத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: ஓபிஎஸ் சூசகம்

Report Print Arbin Arbin in இந்தியா

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பில் நல்ல முடிவு எட்டப்படும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்தோம். வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

எங்களிடம் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் பேசினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி இன்றோ, நாளையோ நல்ல முடிவு எட்டப்படும்.

6 ஆம் திகதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்