தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு 110 கோடி ரூபாய் அள்ளித்தந்த கோடீஸ்வரர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 40 துணை ராணுவத்தினருக்காக கோடீஸ்வரர் ஒருவர் 110 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்துள்ளார்.

இந்திய பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் பேரில் இந்த 110 கோடி ரூபாய் நிதியை அவர் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் தொழிலதிபராக விளங்கும் 44 வயதான முர்டாசா ஹமீத் தமது வருவாயில் ஒருபகுதியை கொல்லப்பட்ட துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அளிக்க முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்த ஹமீத் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்.

புல்வாமா தாக்குதல் தொடர்பில் தகவல் அறிந்த ஹமீத், பிரதமரை நேரில் சந்திக்க வாய்ப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமரிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அவரை நேரில் சென்று சந்தித்து 110 கோடி நிதியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்