நோயாளியான சிறுமியை தத்தெடுத்த தாயார்... உயிர் காக்க சிறுநீரகம் தானம்: உருக வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தத்தெடுத்த பெண் பிள்ளைக்காக தாயார் ஒருவர் சொந்த சிறுநீரகத்தையே தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியை சேர்ந்த தாயார் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாரா என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளார்.

தொடர்ந்து 6 ஆண் மகன்களை பெற்றெடுத்த அந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற தீராத ஆசை இருந்து வந்தது.

இந்த நிலையிலேயே நட்டெல்லை பாதிக்கும் spina bifida என்ற நோயால் பாதிக்கப்பட்ட சாரா என்ற குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.

குழந்தையை தத்தெடுத்த அப்போதே இவர்களுக்கு அந்த நோய் தொடர்பில் தெலிவான புரிதல் இருந்துள்ளது.

மட்டுமின்றி அந்த நோயின் தாக்கத்தால் குழந்தைக்கு எதிர்காலத்தில் சிறுநீரகம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சாராவின் சிறுநீரகம் செயலிழக்க துவங்கியது.

தொடர்ந்து சாராவுக்கு சிறுநீரகத்திற்கான சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். ஆனால் நோயின் தாக்கம் அதிகரித்ததால் மாற்று சிறுநீரகத்திற்கு வாய்ப்பு தேடுங்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரும் சாராவின் 6 சகோதரர்களும் தங்கள் அன்பு சகோதரிக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.

ஆனால் சாராவுக்கு தாயாரின் சிறுநீரகம் மட்டுமே பொருத்தமாக இருந்தது. தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் புனே நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது.

மேலும் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததால் இருவரும் மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.

மட்டுமின்றி கடந்த 30 ஆண்டு காலமாக பெங்களூருவில் குடியிருந்து வந்த இந்த குடும்பம், சாராவின் உடல் நலம் கருதி தற்போது கோவா மாநிலத்திற்கு குடியேற உள்ளனர்.

தத்தெடுத்த குழந்தையிடம் அந்த குடும்பம் காட்டும் அளவு கடந்த பாசம் கண்டு, சாராவை அனுமதித்திருந்த மருத்துவமனை மருத்துவர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்