அபிநந்தன் பணிக்கு திரும்புவது எப்போது: விமானப்படை தளபதி விளக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சூலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய விமானப்படை தளபதி தனோவா,

இந்திய விமானப்படை சிறப்பான திறன் கொண்டது என தெரிவித்துள்ளார். மட்டுமின்றி மிக் 21 ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்டு தாக்குதல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பதி பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.

இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை நாங்கள் கணக்கு வைக்கவில்லை, அதனை அரசு தான் விளக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் தாக்க வேண்டிய இலக்கை இந்திய போர் விமானங்கள் தாக்கிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்