குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டுக்குள் வந்த கணவன்: இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் கடைக்கு அழைத்து சென்று பானிப்பூரி வாங்கி கொடுக்கவில்லை என்பதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கோபால். இவர் மனைவி அஞ்சனா.

இரு தினங்களுக்கு முன்னர் அஞ்சனா தனது கணவரிடம், தனக்கு சாப்பிட பானிப்பூரி வேண்டும் எனவும் தன்னை கடைக்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் தனக்கு வேலை இருப்பதாக கூறிய கோபால் அடுத்த நாள் கடைக்கு அழைத்து செல்வதாக அஞ்சனாவிடம் கூறினார்.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

பின்னர் வீட்டின் கீழ் தளத்துக்கு சென்று தண்ணீர் பிடித்து வருமாறு கோபாலிடம் அஞ்சனா கூறினார்.

இதையடுத்து தண்ணீர் பிடித்து கொண்டு வீடு இருக்கும் முதல் மாடிக்கு கோபால் வந்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், தனது புடவையால் அஞ்சனா மின் விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இதை பார்த்து கதறிய கோபால் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அஞ்சனாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்