அபிநந்தன் எந்த ஜாதியை சேர்ந்தவர்? இந்தியர்களின் மோசமான தேடல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தாய் மண்ணுக்காக பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கி இந்தியாவின் ரகசியம் காத்த விமானி அபிநந்தனின் ஜாதி பெயரை கூகுளில் பலரும் தேடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மக்களின் ஹீரோ என புகழப்படும் அபிநந்தன் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அபிநந்தனின் சொந்த ஊர், பெற்றோர் மற்றும் கல்வி என அனைத்தையும் தேடி வந்த நெட்சன்கள் அவரது ஜாதியையும் விட்டு வைக்காததது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிநந்தன் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை இந்தியா முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.

தேசப்பற்றுடன் வாழும் வீரனுக்கு ஒவ்வொரு இந்தியனும் தலைவணங்க வேண்டும், ஆனால் அதனை தவிர்த்து இப்படி ஜாதியை தேடுவது மிகவும் மோசமானது என கருத்துக்கள் எழுந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்