அபிநந்தனை விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான்: ஒப்பந்தத்தை மீறி வீடியோவை வெளியிட்டதற்கு இந்தியா கடும் கண்டனம்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்திய வீரர் அபிநந்தனை விசாரணை மேற்கொள்வதை வீடிவாக வெளியிட்ட பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் நேற்றைக்கு முன்தினம் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. அதனை தடுப்பதற்காக இந்திய ராணுவ வீரர்கள், போர் விமானங்களில் சென்று அவர்களை துரத்தும் வேளைகளில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் சிக்கி கொண்டார். அவரை விரைவில் மீட்க நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் என இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அவரை அமைதியான முறையில் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தந்தை மீறி காயமடைந்த இந்திய விமானப் படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்டதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய வீரருக்கு எந்த துன்புறுத்தலும் நிகழக் கூடாது என்பதை மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம். அவரை பாதுகாப்பாக உடனே திரும்ப அனுப்ப வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers