இந்திய விமானியை உயிரோடு அவரது நாட்டுக்கு அனுப்புங்கள்: பாகிஸ்தானில் குவியும் ஆதரவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடந்து வந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக மிக் 21 என்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானப்படையினர் இந்திய விமான அபிநந்தன் என்பவரையும் சிறை பிடித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.

இந்நிலையில் அபிநந்தனை அடித்து உதைத்து அவரது ரத்தம் தோய்ந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, எனது பெயர் அபிநந்தன் என அவர் கூறும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமானிக்கு பாகிஸ்தான் நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மனிதாபிமானத்தோடு இந்திய விமானியை நடத்துங்கள்....அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது நமது கடமை.

அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படாமல் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers