எல்லையில் பதற்றம்! ராணுவ நடவடிக்கையை அரசியலாக்க கூடாது: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

Report Print Fathima Fathima in இந்தியா

எல்லையில் நடக்கும் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

21 கட்சிகள் பங்கேற்ற நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதியாக நிற்போம், ஆனால் ராணுவ நடவடிக்கையை ஆளும் கட்சி அரசியலாக்க கூடாது என தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers