இனியும் பொறுக்க முடியாது! ஒசாமா பின்லேடனை கொன்றது போல... இந்திய அமைச்சர் அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என இந்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இன்று அதிகாலையில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்த நிலையில், இந்தியா எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக இந்தியா தெரிவித்தது.

இதற்கிடையில் பாகிஸ்தான் தரப்பில், கட்டுப்பாட்டை தாண்டி வந்த இரண்டு இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஆயுதப்படை செய்தி தொடர்பாளர் மேஜர் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார்.

இதனால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டதையடுத்து இந்திய பிரதமர் அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இந்திய அமைச்சர் அருண் ஜேட்லி அளித்துள்ள பேட்டியில், ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும்

அமெரிக்கா போலவே இந்தியாவும் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்க முடியும்

இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது, அமெரிக்கா போல பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்க இந்தியா தயங்காது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers