பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் இருங்கள்! இந்திய அரசின் உத்தரவால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

புல்வாமா தாக்குதல் நடைபெற்றது முதலே இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் காஷ்மீரில் உள்ள ரஜோரியில், இந்திய ராணுவம் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எல்லையில் உள்ள பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார்.

மேலும் ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தற்போதைய நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கமளித்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய உளவு அமைப்பான ரா-வின் உயரிதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers