7 வருடங்களாக இந்தியரை உயிருக்கு உயிராக காதலித்த வெளிநாட்டு இளம்பெண்: இறுதியில் என்ன ஆனது?

Report Print Raju Raju in இந்தியா

ஸ்வீடனை சேர்ந்த பெண்ணும் இந்தியாவை சேர்ந்த இளைஞரும் 7 வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், அப்பெண் இந்தியாவுக்கு வந்து தனது காதலனை கரம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அசாருதின். இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோவாவில் சமையல்காரராக வேலை செய்து வந்த போது ஸ்வீடனை சேர்ந்த எம்மா லோர் என்ற பெண்ணை அங்கு சந்தித்துள்ளார்.

அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் பின்னர் எம்மா தனது சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும் எம்மாவும், அசாருதினும் சமூகவலைதளம் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். பின்னர் கடந்த 2015-ல் எம்மாவை காண அசாரூதின் ஸ்வீடனுக்கு சென்றார்.

இந்நிலையில் சமீபத்தில் எம்மா இந்தியாவின் ஒடிசா மாநிலத்துக்கு தனது குடும்பத்தினருடன் வந்தார்.

இதையடுத்து எம்மாவுக்கும், அசாருதினுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் இருவீட்டாரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து அசாருதின் கூறுகையில், எங்களின் ஏழு வருட காதல் திருமணத்தில் முடிந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

எம்மா கூறுகையில், நான் நல்ல இல்லத்தரசியாக இருக்க விரும்புகிறேன், என் கணவரையும் அவர் குடும்பத்தாரையும் நன்றாக கவனித்து கொள்வேன்.

அதே நேரத்தில் குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட தொழில் செய்யவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers