12 நாட்கள்.... இந்தியாவின் அதிரடி வியூகம்... தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடி: முழு தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய ராணுவப்படையினர் நேற்று இந்திய எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை அழிப்பதற்காக கடந்த சில நாட்களாக சில ரகசிய திட்டங்களை வழிவகுத்து அதன்படி செயல்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதல்...ரகசிய திட்டங்கள் என்னென்ன?

  • பிப்ரவரி 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
  • பிப்ரவரி 15 ஆம் திகதி விமானப்படை தளபதி பிரேந்திர சிங் தோவானி தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
  • பிப்ரவரி 16 முதல் 20 திகதி வரை பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்க வேண்டிய இடங்களை இந்திய விமானப்படை தீர்மானித்திருந்தது.
  • பிப்ரவரி 20-ம் திகதி முதல் 22-ம் தேதி வரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள இடங்கள் மற்றும் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
  • பிப்ரவரி 22- ம் திகதி குவாலியரில் உள்ள ஐ.ஏ.எஃப்-1 ஸ்குவாட்ரான் டைகர் பிரிவு மற்றும் ஸ்குவாட்ரான் 7-ஐ சேர்ந்த Battle Axes பிரிவு விமானங்கள், மிராஜ் ரக விமானங்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
  • பிப்ரவரி 24-ம் திகதி ஆக்ராவிலிருந்து வந்த வானத்தில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன், மிராஜ் ரக விமானங்களை இணைந்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
  • பிப்ரவரி 25-ம் திகதி முதல் 26-ம் திகதி அதிகாலை 3:30 மணி வரை, மிராஜ் விமானங்களில் இஸ்ரேல் தயாரிப்பான லேசர் கதிர் வழியாக இயங்கும் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டது.
  • IAF Heron surveillance ட்ரோன் எல்லை பகுதியில் ரகசிய இடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. விமானிகள் இலக்குகளை மீண்டும் ஒருமுறை கடைசியாக சோதித்துப் பார்த்துக்கொண்டனர். இறுதி உத்தரவு கிடைத்ததும் 26 ஆம் திகதி அதிகாலை 3.30 மணிக்கு தாக்குதல் தொடங்கப்பட்டு 30 நிமிடத்தில் தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது.
  • 12 மிராஜ் ரக விமாகங்கள் 1,000 கிலோ வெடிகுண்டுகள் வீசின. பாகிஸ்தானுக்குள் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஹைபர் பக்துவ்னா மாகாணத்தில் உள்ள பாலகோட் மீது தாக்குதல் நடத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers