பெற்ற தாயை கொன்றுவிட்டு சடலத்துடன் படுத்து தூங்கிய இளைஞர்: அதிரவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு சடலத்துடன் தூங்கிய மனநலம் பாதித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி.

இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா (7) என்ற மகனும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலப்பாண்டி கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தாயிடம் அருணாச்சலப்பாண்டி தகராறு செய்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தாயின் சடலத்துடனேயே தூங்கியுள்ளார்.

பின்னர் அருணாச்சலப்பாண்டியின் அப்பா சின்னகணபதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அருணாச்சலப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers