பள்ளி வளாகத்தில் இளம் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது ஏன்? வெளியான பகீர் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரம்யா.

இவர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்து விட்டு . தனது வகுப்பில் 3 மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்

அப்போது கையில் நீளமான கத்தியுடன் பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் ரம்யாவிடம் தகராறு செய்து, கத்தியால் ஆசிரியை ரம்யாவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன 3 மாணவர்களும் அங்கிருந்து அலறியபடியே ஓடியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் விசாரணையில், ரம்யா கல்லூரியில் படித்து வந்த போது, பேருந்து பயணத்தில் ராஜசேகர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் நட்பு காதலாக மாறி ஒருவரை ஒருவர் விரும்பியதாகத் கூறப்படுகின்றது.

கல்லூரிப்படிப்பு முடிந்து ஆசிரியர் பணியில் சேர்ந்த பின்னரும் இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்ததாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டுக்குச் பெண் கேட்டு சென்ற ராஜசேகரிடம் சாதியை சுட்டிக்காட்டி ரம்யாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது

இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பின்னர் தனது பெற்றோரின் பேச்சை கேட்டு ரம்யா, காதலன் ராஜசேகருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. பலமுறை முயன்றும் ரம்யா மனம் மாறாததால் ராஜசேகர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ரம்யா, பள்ளிக்கு நேரத்துடன் சென்று வகுப்பறைகளை திறந்து வைப்பது வழக்கம் என்பதை தெரிந்து வைத்திருந்த ராஜசேகர், வெள்ளிக்கிழமை காலை ரம்யாவை பின் தொடர்ந்து சென்று இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

ரம்யாவின் தந்தை சுப்பிரமணியன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பொலிசார் கொலைக்காண காரணம் குறித்து முதல் கட்ட தகவலை தெரிவித்துள்ள நிலையில் ராஜசேகரை பிடித்து விசாரித்தால் கொலை குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers