இந்தியாவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 32 பேர் உயிரைப்பறித்த சம்பவம்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த பெண்கள் உட்பட 32 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தின் கோலகாட் மாவட்டத்தில் சல்மாரா தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் நேற்று சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மது வாங்கி குடித்து உள்ளனர்.

குடித்த சில மணி நேரத்திலேயே அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் உடனடியாக 62 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 9 பெண்கள் உட்பட 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 40 பேரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்டவிரோத மது குடித்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers