ராஜிவ்காந்தி கொலை வழக்கு..தமிழர்கள் 7 பேரும் இதற்கு முன் விடுதலை! வெளியான மகிழ்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 7 பேரும் மக்களவை தேர்தலுக்கு முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் கூட்டணி பிடிக்கும் முயற்சியில் கட்சிகள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

திராவிட கட்சிகளை தமிழகத்தை ஆட்சி செய்து நாசம் செய்துவிட்டனர் என்று பா.ம.க கூறிவந்த நிலையில், அதே பா.ம.க வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளது.

இந்த கூட்டணியுடன் பா.ஜ.க-வும் இணைந்துள்ளது.

திராவிட கட்சிகள் மீது சீறிப்பாயந்த பா.ம.கவினர் இப்போது யாருடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று கூறி அவர்கள் முன்பு பேசிய வீடியோ, புகைப்படம் போன்றவைகளை சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றன.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலைக்காகவே பா.ம.க கூட்டணி வைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து இது குறித்து பா.ம.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாலு, நாங்கள் கூட்டணி குறித்து பேசிய போது, அவர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறினர்.

அந்த பத்து பத்து அம்ச கோரிக்கைகளில் முக்கியமானது ஏழு தமிழர் விடுதலை. இதனால் இதைப் பற்றி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.

கண்டிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers