பொது கழிப்பறையில் தங்கியபடி சமைத்து சாப்பிடும் விதவை பெண்: மனதை உருக்கும் பின்னணி காரணம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் விதவை பெண்ணொருவர் பொது கழிப்பறையில் தங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மி. இவரின் இரண்டு மகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் லஷ்மியின் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார்.

இதன்பின்னர் தனது பழைய வீட்டில் லஷ்மி தனியாக தங்கி வந்தார்.

ஆனால் வீடு பெரியளவில் பழுதடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

வீட்டை பழுது பார்ப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் சில காலமாக பொது கழிப்பறையில் தங்க வேண்டிய மோசமான நிலைக்கு லஷ்மி தள்ளப்பட்டுள்ளார்.

சிறியளவில் உள்ள கழிப்பறையில் அவர் தங்கியுள்ள நிலையில் பொதுவெளியில் சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்.

அரசாங்கம் கஷ்டப்படுகிறவர்களுக்கு கட்டி தரும் வீடுகளை லஷ்மிக்கு இன்னும் கட்டிதரவில்லை.

இது குறித்து ஊடகம் வாயிலாக அரசாங்க அதிகாரிகளுக்கு லஷ்மியின் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டது.

சந்திரா நாயக் என்ற அதிகாரி கூறுகையில், விதவை பெண்ணான லஷ்மி, இலவச வீடு திட்டத்துக்கு தகுதியானவராக இருந்தால் அவருக்கு விரைவில் வீடு கட்டித்தரப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்