கண் திறந்து பாருங்க மாமா..இறந்த ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்து பேசிய சிறுமி! கதறி அழுத குடும்பத்தினர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தங்களை பள்ளிக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவரை காண வந்த பள்ளி குழந்தைகள் அங்கிள் எழுந்திருச்சு கண் திறந்து பாருங்க என்று கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் சுங்காந்திடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பள்ளிக் குழந்தைகளை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பத்திராக அழைத்துச் சென்று, மீண்டும் மாலை நேரத்தில் பத்திரமாக கொண்டு வந்து விடுவார்.

மற்ற ஆட்டோ டிரைவர்களைப் போன்று பணத்திற்காக அதிகமாக குழந்தைகளை அழைத்துச் செல்லாமல், போதுமான அளவிலான குழந்தைகளையே அழைத்துச் செல்வார். மற்ற டிரைவர்கள் யாரேனும் அப்படி அழைத்துச் சென்றால், அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.

குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர், பள்ளிக்கு வராமல் ஒரு சில குழந்தைகள் அடம் பிடிக்கும் என்பதால், எப்போதும் தன் கையில் சாக்லேட் வைத்திருப்பார். அப்படி குழந்தைகள் அழுதால் சாக்லெட் கொடுத்து அழைத்துச் செல்வார்.

இதன் காரணமாகவே குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளுக்கு கதிர்வேலை மிகவும் பிடித்து போயிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கதிருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மாற்று டிரைவர் சென்று வந்துள்ளார்.

ஆனால் கதிரின் சிகிச்சையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், கடந்த 19-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் பள்ளிக்கு சென்று மாலையில் வீட்டிற்கு கூட செல்லாமல், அதே சீறுடையில் கதிரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது அதிலிருந்த மாணவி ஒருவர் அங்கிள் கண்னை திறந்து பாருங்க, நாங்கள் வந்திருக்கோம் , இனிமேல் நீங்க ஆட்டோ ஓட்ட வரமாட்டீங்களா என்று கண்கலங்கிய நிலையில் கேட்க, அங்கிருந்த கதிரின் குடும்பத்தினர் சிறுமி சொன்ன வார்த்தையை கேட்டு கதறி அழுதுள்ளனர்.

சிறுமிகளுடன் அவர்களின் பெற்றோர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் கூட சிலர் வராமல் இருந்த நிலையில், இந்த பள்ளிக் குழந்தைகள் வந்திருப்பது எங்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது என்று அங்கு வந்திருந்த உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்