கார் ரேஸில் ஈடுபட்ட மாணவி..100 கி.மீற்றர் வேகத்தில் மோதியதால் தூக்கி வீசப்பட்ட இளைஞனின் அதிர்ச்சி வீடியோ காட்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காரை அதிவேகமாக ஓட்டி வந்த கல்லூரி மாணவி, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன் மீது அதிபயங்கரமாக மோதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த கொடிசியா தொழிற்காசியகம் சாலையை சுற்றி மொத்தம் 4-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் 5 கல்லூரிகளும் உள்ளன.

கல்லூரிகள் அதிகம் இருப்பதால், இங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் நீண்ட சாலையான இதில் போட்டி போட்டுக் கொண்டு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவர். இதனால் நாள் ஒன்றிற்கு எப்படியேனும் இரண்டு சிறிய விபத்துகள் ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4.42 மணியளவில் TN 38 AJ 1383 எண் கொண்ட சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சுமார் 100 கி.மீற்றர் வேகத்தில் அருகிலிருக்கும் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிகவேகமாக ரேஸில் ஈடுபட்டுள்ளது.

அப்போது, இஸ்கான் கோயில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் இருசக்கர வாகனத்தின் மீது அந்த சொகுசு கார் பயங்கரமாக மோதியது.

இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்த இளைஞர் அந்தரத்தில் இரண்டு, மூன்று சுத்தப்பட்டு கீழே விழுந்தார். ஆனால் விபத்தை ஏற்படுத்திய அந்த காரானது நிற்காமல் சென்றதால், அருகிலிருந்த மக்கள் அந்த காரை பிடிக்க முயன்றுள்ளனர்.

காரானது வேகமாக சென்றதால், பிடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போத ஏற்படுத்தியவர் கல்லூரி மாணவி தட்சணா ரூத் என்பதை உறுதி செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகன விபத்தில் படுகாயம் அடைந்தது கல்லூரி மாணவர் பாலாஜி தற்பாது தனியார் மருத்துவனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்