சென்னை அருகே ஆழ்கடலுக்குள் விமானம் கண்டுபிடிப்பு! வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னை அருகே நீலாங்கரை பகுதியில் ஆழ்கடலுக்குள் சிறிய ரக போர் விமானம் ஒன்றினை 4 இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நீர் மூழ்கி பயிற்சியாளரான அரவிந்த் புதுச்சேரியில், ஆழ்கடல் நீர்மூழ்கி பயிற்சி தளம் அமைத்து, சுமார் 25,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6.30 மணிக்கு நீலாங்கரை மீனவ குப்பத்தைச் சேர்ந்த சந்துரு, மரக்காணம் பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த திமோத் ஆகியோருடன் ஆழ்கடல் நீர்மூழ்கி பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது சரியாக 42 அடி ஆழத்தில் பெரிய பொருள் ஒன்று தென்பட்டுள்ளது. அருகில் சென்று பார்த்த போது, விமானம் போல இருந்ததால் சந்தேகத்தில், வீடியோவாக படம்பிடித்த அவர்கள், உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், 1963-ம் ஆண்டு, இப்பகுதியில் சிறிய ரக போர் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பொழுது உள்ளிருந்த விமான ஒட்டி மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டார். பல வருடங்களாக அதனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானம் விபத்துக்குள்ளான விமானம்தானா என்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்