தமிழர்கள் உட்பட 45 பேரை கொன்ற தீவிரவாதி! தாக்குதலுக்கு உதவிய பெண்கள் மற்றும் சிறுவர்கள்.. திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

புல்வாமாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், வெடிபொருட்களை அவர்கள் எடுத்து செல்ல பெண்களும், சிறார்களும் உதவி செய்தார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி அடில் தர் நடத்திய வாகன வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு Jaish-e-Muhammed என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, தாக்குதலுக்கு RDX grade 5 மற்றும் ammonium nitrate ஆகிய வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது.

இந்த பொருட்களை தீவிரவாதிகள் சம்பவ இடத்துக்கு கொண்டு வர பெண்களும், சிறார்களும் அவர்களுக்கு உதவினார்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வெடிபொருட்கள் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அந்த வெடிபொருட்களை வைத்து வெடிகுண்டுகள் தயார் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers