40-க்கு மேற்பட்டோரை பலிகொண்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி..காயத்தை பொருட்படுத்தாமல் சண்டை போட புறப்பட்டு சென்ற இராணுவ தளபதி

Report Print Santhan in இந்தியா

தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்து விடுமுறையில் இருந்த படைத்தளபதி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு விடுமுறையை ரத்து செய்து விட்டு சென்று தலைமை தாங்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் திகதி நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலி, 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புபடையினர் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக கடந்த 18-ஆம் திகதி தீவிரவாதிகள் புல்வாமாக பகுதியில் பதுங்கியிருக்கும் இடம் குறித்து இராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், அப்பகுதியை சுற்றி வளைத்த இராணுவத்தினர், அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிரிகேடியர் ஹர்பீர் சிங் காயமடைந்தார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அதேபோல், டிஐஜி அமித் குமாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின் மீண்டும் நள்ளிரவில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. இதை அறிந்த அவர்கள்

காயத்தை பொருட்படுத்தாமல், தங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து விட்டு தாக்குதல் இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அப்பகுதிக்கு பிரிகேடியர் ஹர்பீர் சிங்தான் படைத்தளபதி என்பதால், அவரை பார்த்ததும் வீரர்கள் புது உத்வேகம் அடைந்துள்ளனர்.

அதன் பின் ஹர்பீரும் துப்பாக்கியை ஏந்தியபடி வீரர்களுக்கு தலைமை தாங்கி தாக்குதலை நடத்தினார். சுமார் 17 மணி நேரம் நடந்த தாக்குதலில், புல்வாமா சம்பவத்திற்கு மூளையாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தளபதி உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர், காயத்தை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக வந்து மீண்டும் தாக்குதல் நடத்திய தள்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers