திருமணமான சில நாட்களில் கணவரை விட்டு ஓட்டம் பிடித்த புதுமனைவி.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான சில நாட்களில் புதுப்பெண் தனது கணவர் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, நகைகள் மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அரன்ஞ் கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்தர் (28). இவருக்கும் கமலா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைப்பெற்றது.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் கணவர் வீட்டில் கமலா இருந்தார். அப்போது கமலாவின் உறவினர் 3 பேரும் உடன் இருந்தனர்.

அன்றிரவு விருந்துக்கு பின்னர் கணவர் தர்மேந்தர் மற்றும் அவர் குடும்பத்தார் 5 பேருக்கு கமலா தேனீர் கொடுத்தார்.

இதை குடித்த அவர்கள் அப்படியே மயங்கியுள்ளனர்.

பின்னர் அடுத்தநாள் காலையில் மயங்கி கிடந்த அவர்களை பார்த்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையில் தர்மேந்திரா உட்பட 6 பேர் குடித்த தேனீரில் மயக்க மருந்து கலந்திருந்தது தெரியவந்தது.

மேலும் தர்மேந்திராவின் மனைவி கமலா கணவர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புடையை விலையுயர்ந்த பொருட்களுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

கமலாவின் மூன்று உறவினர்கள் மாயமானதும் உறுதியானது.

சம்பவம் குறித்து விசாரித்து வரும் பொலிசார் கூறுகையில், தர்மேந்திராவை திருமணம் செய்த கமலா, தான் பெற்றோரை இழந்தவள் என்றும் மாமா மற்றும் அத்தையுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதன்பின்னரே இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

மேலும் கமலாவின் மற்ற உறவினர்கள் குறித்தும் அவர் சொந்த ஊர் குறித்தும் தர்மேந்திராவின் குடும்பம் விசாரிக்காதது வியப்பை ஏற்படுத்துகிறது.

திருமணம் ஆக வேண்டும் என்ற அவசரத்தில் கமலாவை நபர் ஒருவர் மூலம் அணுகி தர்மேந்திரா திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து முறைப்படியான புகாரை தர்மேந்திரா குடும்பத்தினர் என்னும் கொடுக்கவில்லை, புகார் கொடுத்த பின்னர் வழக்குப்பதிவு செய்வோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...