சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயை கொன்ற தஷ்வந்த்! சீக்கிரம் தூக்கில் போடணும்.. கொந்தளித்த சித்தி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இது குறித்து அவன் தந்தை மற்றும் சித்தி வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

போரூரை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தந்தையால் ஜாமீன் பெற்று வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாய் சரளாவையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பியோடினார்.

இதையடுத்து தமிழக பொலிசார் அவரை மும்பையில் வைத்து கைது செய்தனர்.

தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. தண்டனை வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆன நிலையில், தஷ்வந்தை மீண்டும் ஜாமீனில் வெளியே எடுக்க அவரது தந்தை சேகர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தஷ்வந்தின் தந்தை சேகர் மற்றும் சித்தி ஆகியோர் பிரபல நாளிதழான ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ளனர்

சித்தி கூறுகையில், என் அக்காவுக்கும், மாமாவுக்கும் நல்ல மனசு, ஆனால் அவர்களுக்கு போய் இப்படியொரு மகன்.

சிறு வயதில் இருந்தே தஷ்வந்த் பிடிவாதக்காரன். நினைத்ததை பெற்றோர்கள் மூலம் சாதித்துக் கொள்வான். எல்லாக் குழந்தைகளும் சிறு சிறு தவறு செய்யும். ஒருகட்டத்தில் திருந்திவிடும்.

அப்படித் தான் தஷ்வந்தையும் நினைத்தார்கள். அந்த சிறுமி காணாமல் போன அன்று கூட என் அக்கா எனக்கு போன் செய்தாள். எப்படியும் கிடைத்துவிடும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.

ஆனால் குற்றம் சம்பவத்திற்கு காரணமே தன் மகன் என்று தெரிந்தபோது நொந்துபோனாள். அவன் ஜாமீன்ல வந்தபோதும் கூட வீட்டில் அவனுக்கு நல்லா தான் அக்கா சாப்பாடு போட்டாள்.

ஆனால் ஒரு குழந்தையை போய் இப்படி பண்ணிட்டியே உனக்கு உறுத்தல் இல்லையாடா என அக்கா அவனிடம் அடிக்கடி கேட்டுள்ளார்.

அந்த ஆத்திரத்தில் தான் என் அக்காவையே கொலை செய்துள்ளான்.

இவ்வளவு நடந்தும் ஏன் அவனை இன்னும் உயிரோடு வச்சிருக்காங்கன்னு தான் தோணுது. அவனை சீக்கிரமே தூக்கில் போடணும். அப்போதுதான் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதோடு, குழந்தைகள் மீது கையை வைக்கிறவங்களுக்கும் பயம் வரும் என்று கூறியுள்ளார்.

தஷ்வந்தின் தந்தை சேகர் கூறுகையில், தஷ்வந்தை வெளியே எடுக்க நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. இனி எப்பவும் அவனுக்கு ஆதரவாக போகமாட்டேன். சின்ன வயசில் இருந்து அவனுக்கு எல்லாத்தையும் ஆசைப்பட்டு செஞ்சேன். ஆனால் அவனை கண்காணிக்காமல் விட்டுவிட்டேன்.

ஆனால் அவனுக்கு தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம். ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும். ஏற்கனவே இரண்டு உயிர்கள் போய் விட்டது. இன்னொரு உயிரும் போக வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்