கணவனை இழந்து காதலனுடன் வாழ்ந்து வந்த பெண்! பழைய காதலன் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெண்ணின் தற்போதைய காதலனை, முன்னாள் காதலன் கூலிப்படை வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஏ.கே. மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவருக்கு கணவனை இழந்து விதவையாக இருந்த முருகேஸ்வரி என்ற குட்டியம்மாள்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகேஸ்வரிக்கு கல்லூரி படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் பழக்கம் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு சென்றதால், அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

அதன் பின் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 19-ஆம் திகதி இரவு குட்டியம்மாளை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சிவக்குமார் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரை இடையில் வழிமறித்த மர்ம கும்பல் அவர் மீது மிளகாய் பொடியை தூவி, சரமாரியாக வெட்டியுள்ளனர். மர்ம உறுப்பை அறுத்தும், கல்லை போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால் விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது குட்டியம்மாளுக்கும் புதுப்பூங்குளம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்துள்ளனர். பழனி வேலைக்காக வெளியூர் சென்றிருந்த போது தான் குட்டியம்மாளுக்கும், சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த குட்டியம்மாளை பழனி கண்டித்துள்ளார். ஆனால் குட்டியம்மாளோ இது குறித்து சிவக்குமாரிடம் தெரிவிக்க, பழனிக்கும், சிவக்குமாருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பல முறை சொல்லியும் கேட்காததால், ஆத்திரமடைந்த பழனி குட்டியம்மாளை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். இதை அறிந்த சிவக்குமார், குட்டியம்மாளை திருப்பூர் அனுப்பவதற்காக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விட்டுத் திரும்பியபோது, கூலிப்படையை வைத்து சிவக்குமாரை பழனி கொன்றதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்