கணவரின் மரண செய்தி கேட்டு வலியால் துடித்த கர்ப்பிணி.... சில மணி நேரங்களில் பிறந்த குழந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், கடந்த 18 ஆம் திகதி புல்வாமா கிராமத்தில் பதுங்கியிருந்த இந்த 2 தீவிரவாதிகளை இந்திய இராணுவம் சுட்டுக்கொலை செய்தது.

அவர்கள் இருவரும் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த Martyr Sheo Ram என்பவரும் ஆவார். உயிரிழந்த இவருக்கு இவரது கிராமத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவரது இறப்பு செய்தியை கேட்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி மயங்கி விழுந்து வலியால் துடித்துள்ளார்.

Sheo Ram - க்கு திருமணமாகி ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். தனது கணவரின் இறுதி அஞ்சலியில் அழுதுகொண்டிருந்த அவர் மயங்கி விழுந்ததையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன அழுத்தத்தில் இருந்த காரணத்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதையடுத்து சில மணிநேரங்களில் பெண்குழந்தை பிறந்தது.

குழந்தை பிறக்கும்போது உன் அருகில் இருப்பேன் என கூறிசென்றார், ஆனால் பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்காமல் சென்றுவிட்டாரே என மனைவி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்