4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தூக்கு! தண்டனை திகதி அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த மகேந்திர சிங் கடந்தாண்டு ஜூலை மாதம் நண்பர் ஒருவரை சந்திக்க அவர் வீட்டுக்கு மது போதையில் சென்றுள்ளார்.

அங்கு நண்பர் அருகில் 4 வயது மகள் படுத்திருந்த நிலையில் நண்பரை சந்தித்து விட்டு மகேந்திர சிங் தனது வீட்டுக்கு வந்தார்.

பின்னர் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்ற போது சிறுமி தனியாக இருந்ததால் அவரை தூக்கி கொண்டு அருகிலிருந்த விவசாய நிலத்துக்கு மகேந்திர சிங் வந்துள்ளார்.

பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு அங்குள்ள புதரில் போட்டுவிட்டு ஓடியுள்ளார்.

சிறுமியை காணாமல் பதறிய தந்தை பின்னர் பலத்த காயத்துடன் விவசாய நிலத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

இது சம்மந்தமாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திர சிங்கை கைது செய்தனர்.

அவர் குற்றவாளி என கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றம் முடிவு செய்த நிலையில் அவருக்கு மரண தண்டனையை தற்போது உறுதி செய்துள்ளது.

அதன்படி வரும் மார்ச் 2ஆம் திகதி தூக்கு தண்டனை மகேந்திர சிங்குக்கு நிறைவேற்றப்படவுள்ளது. இதனிடையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி மகேந்திர சிங் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளார்.

மேலும், தண்டனையை குறைக்க கோரி ஜனாதிபதிக்கும் அவர் கருணை மனு அனுப்பலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்