மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் சசிகலா! பச்சை தண்ணி தான் எனக்கு சாப்பாடு என கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவன், மாமியார் சில மாதங்களுக்கு முன்பு மாமானார் என அனைவரையும் இழந்து, தற்போது தன்னுடைய குழந்தைகளை வளர்க்க முடியாமல் சசிகலா படும் பாடு கேட்போரை கண்கலங்க வைக்கிறது.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் தெற்கு அய்யம்பாளைய கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா. 15 வருடத்திற்கு முன்பு தங்கவேல் என்பவரை திருமணம் செய்த, இவருக்கு ஜீவிதா, கார்த்திகா, இரட்டையர்கள் ராம்ஜித், லட்சித் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு முன் இவரது கணவர் தங்கவேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் முதலில் கால் விரல்களை இழந்த இவர், அதன் பின் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றார்.

இந்த நோயின் தாக்கத்தால் அப்படியே வேலைக்கு சென்றதால், நோயின் பாதிப்பு அதிகமாகி கடந்த 2014-ஆம் ஆண்டு இறந்தார். தங்கவேல் இறந்த அதே ஆண்டு, அவரது அம்மா இறந்துவிட்டார்.

இதனால் சசிகலா தன்னுடைய குழந்தைகள் மற்றும் மாமனாருடன் வசித்து வந்தார். ஆனால் மாமனாரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, இப்போது தன் நான்கு பிள்ளைகளை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, என் வாழ்க்கை சூனியம் வைத்தது போல் ஆகிவிட்டது. குழந்தைகளை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். 100 நாள் வேலைக்கு செல்கிறேன், அதன் பின் வெளியில் எங்கு கிடைக்குமோ அங்கு வேலைக்கு செல்கிறேன்.

நான் சிறுவயதில் இருக்கும் போதே இடது கண்ணில் கண்ணாடி கிளாஸ் குத்தியதால், ஒரு கண்ணின் பார்வை இழந்தேன். வேலைக்குக் எங்கு கூப்பிட்டாலும் செல்வேன். ஆனால் நடந்தேதான் அங்கெல்லாம் வேலைக்குப் செல்வேன்.

உள்ளூரில் தினமும் மக்களிடம் பாலை சேகரித்து வைத்து, அதை ஒரு தனியார் கம்பெனி வேன் வரும்போது, ஏற்றிவிட வேண்டும்.

இதற்கு மாதம் 1500 ரூபாய் சம்பளம் வரும் அதன் பின் 100 நாள் வேலைக்குப் போவதால் மாதம் 3000 வரை கிடைக்கும். இதுதான் வருமானம்.

மழைக்காலத்தில் அதுவும் கிடைக்காது. பலநாள் என் பிள்ளைங்களுக்குக் கிடைக்கிறத வச்சு சாப்பிட வச்சுட்டு, நான் வெறும் பச்சத் தண்ணிய குடிச்சுட்டு வாழ்ந்து வருகிறேன்.

என் பிள்ளைகளை எப்படியாவது பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும். என்னிடம் ஆதரவற்ற விதவை சான்றிதழ் இருக்கிறது. 12-வது வரை படித்துள்ளேன்.

அரசாங்கம் ஏதேனும் வேலை போட்டு கொடுத்தால் என் வாழ்வில் ஒளி பிறக்கும் என்று கண்கலங்கி வேதனையுடன் கூறி முடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்