வெளிநாட்டில் இருக்கும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்! உள்ளூரில் குடும்பத்தில் நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலா இன்று தனது 89வது வயதில் காலமானார்.

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் வசித்து வந்த சகுந்தலா, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசைக் கச்சேரிக்காக வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் இன்று இந்தியா திரும்புவார் என்று உறவினர்கள் கூறினர்.

நெல்லூரில் வைக்கப்பட்டுள்ள சகுந்தலா உடலுக்கு குடும்ப உறவினர்கள், திரைத்துறையினர், நண்பர்கள் எனப் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவர் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்