நடிகை பானுப்பிரியா வீட்டில் சோதனை... 3 சிறுமிகள் மீட்பு: ஆட்கடத்தலில் தொடர்பா?

Report Print Arbin Arbin in இந்தியா

நடிகை பானுப்பிரியாவின் சென்னையில் உள்ள குடியிருப்பில் இருந்து 3 சிறுமிகளை மீட்டுள்ள நிலையில் அவருக்கு ஆட்கடத்தலில் தொடர்பு உள்ளனவா என விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பானுப்பிரியாவின் குடியிருப்பில் சிறார்கள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 3 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட சிறுமிகள் மூவரும் துஸ்பிரயோகத்திற்கு இரையானதாக வாக்குமூலம் அளித்ததாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரது தாயாரே தமது மகளுக்கு உரிய ஊதியம் அளிப்பதில்லை எனவும், மகளை பார்ப்பதற்கே அனுமதிப்பதில்லை எனவும் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே சிறார் நல ஆர்வலர் ஒருவர் அளித்த கடிதத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பானுப்பிரியாவை கைது செய்யவும் கோரிக்கை வைத்திருந்தார்.

பானுப்பிரியாவின் சென்னை இல்லத்தில் 4 சிறார்கள் வேலை செய்து வருவதாகவும், இந்த நால்வரையும் ஒருவரே பணிக்கு சேர்ப்பித்திருந்தால், அது ஆட்கடத்தல் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் அந்த கடிதத்தில் அச்சுத ராவு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிறுமிகளை தாம் தாக்கியது இல்லை எனவும், அவர்களது பெற்றோர்கள் 15 வயது தாண்டியதாக தம்மிடம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே பணிக்கு சேர்த்ததாகவும் பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், குறித்த சிறுமியை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும் எழுந்த புகாரை அடுத்தே தேசிய ஆணையம் பானுப்பிரியாவின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்