துப்பாக்கியால் சுடுவதற்கு முன் வந்த போன் கால்! பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்ட இளைஞனை பற்றி பரபரப்பு தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை மணிகண்டனைப் பற்றி பரபரப்பான தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் இறப்பதற்கு முன் போன் கால் ஒன்று வந்துள்ளது பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரின் தலைமை அலுவலகத்தில் காவலர் மணிகண்டன் (27) நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணிகண்டன் இந்த வயதில் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம்? மன உளைச்சலா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மணிகண்டன் குறித்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், காவலர் மணிகண்டனின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகில் உள்ள வெளியகரம்.

இவரின் அப்பா கண்ணன், அம்மா ராதா. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

மணிகண்டனுக்குத் திருமணமாகவில்லை. பி.எஸ்சி படித்த அவர், 2017-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதன் பின் பயிற்சி முடிந்து 2018--ஆம் ஆண்டு ஆவடி வீராபுரத்தில் காவலராகப் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வாரவிடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்வார்.

இந்நிலையில் கடந்த 2-ஆம் திகதி நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, வீடு திரும்பிய கொஞ்ச நேரத்திலே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மணிகண்டன் தன்னுடைய கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்துவிட்டது என்ற தகவல் தெரிந்தவுடன் வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதனால் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிசாருக்கு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரின் போனை ஆய்வு செய்த போது, இறப்பதற்கு முன் ஒரு போன் கால் வந்துள்ளது.

அதன் பின்னரே அவர் இறந்துள்ளார். இதனால் பேசிய அந்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்