தூக்கில் சடலமாக தொங்கிய இளம் நடிகர்: மனைவியே கொன்றுவிட்டதாக பரபரப்பு புகார்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ராகுல் தீக்‌ஷித் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மனைவி தான் கொலை செய்துவிட்டார் என ராகுல் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் ராகுல் தீக்‌ஷித் கடந்த 30ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதை பொலிசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிக்க வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததால் ராகுல் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனாலும் இது குறித்த உண்மை தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையில் ராகுலை அவரது மனைவி ரூபாலி கொலை செய்திருக்கலாம் என ராகுலின் தந்தை மகேஷ் கூறியுள்ளார்.

இது குறித்த மகேஷின் பேஸ்புக் பதிவில், என் மகன் ராகுல் உடலில் காயங்களும், கீரல்களும் இருந்த போதும் அதை பொலிசார் பொருட்படுத்தாமல் உள்ளனர்.

மனரீதியாக ராகுலை ரூபாலி துன்புறுத்தி வந்தார், எப்போதும் சண்டை போடுவார்.

அவள் தான் ராகுலை கொலை செய்திருப்பாள் என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனிடையில் ராகுல் இறப்பதற்கு முன்னர் ரூபாலி நண்பருடன் நடனமாடிய வீடியோவை பேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருந்தார்.

அதில், எங்களுக்கு பிடித்த பாடல் இது, லவ் யூ என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்