காதலனுக்கு இன்னும் 2-நாளில் வேறொரு பெண்ணுடன் திருமணம்! உண்மை அறிந்து அழகிய இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியில் இருந்த பெண், திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் அடுத்துள்ள தவளைக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன்.

இவருக்கு செந்ததமிழ்செல்வி என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த இவருக்கு கடந்த வருடம் சிறை வார்டனாக பதவி உயர்வு கிடைத்தது.

இதையடுத்து திருச்சி கே.கே.நகரில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டதால், செந்தமிழ் செல்வி தனக்கு வழங்கப்பட்ட வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

நேற்று மாலை 6 மணி அளவில் ஷிப்டுக்கு வர வேண்டிய இவர், நேரம் ஆகியும், வராததால், சக ஊழியர்கள் அவருடைய போனிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவருடைய போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதால், சிறைக்காவலர்கள் செந்தமிழ் செல்வி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் விரைந்து வந்த பொலிசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, அவர் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரது உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், செந்தமிழ்செல்விக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இவரும் திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் ஆண் சிறைக்காவலர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் நெருங்கி பழகியுள்ளனர். ஆனால் இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த ஆண் சிறைக்காவலர் இவரை விட்டு சென்றுள்ளார்.

பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைத்த போது, அந்த ஆண் சிறைக்காவலர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டதாகவும், திருமணம் வரும் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் என்ற தகவல் செந்ததமிழ்ச் செல்விக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்து மிக வேதனையில் இருந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து, மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதுடன், ரத்தக் காயங்களுடன் கண்டுக்கப்பட்ட நிலையில், தற்போது செந்தமிழ் செல்வியும் தற்கொலை செய்துகொண்டதால், திருச்சி காவலர்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்