சிதைந்து போன அழகிய குடும்பம்! எல்லோரையும் கொன்று விட்டு தற்கொலை செய்த கணவன்... சோக பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவி, 3 குழந்தைகளை கொன்று விட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குப்தா.

இவர் தனது மனைவி சரிதா (45) மகள்கள் ரச்சனா (20), பயல் (15) மற்றும் மகன் ஆயூஸ் (10) ஆகியோருடன் வசித்து வந்தார்.

ரமேஷின் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் ரமேஷுக்கு தொழிலில் திடீரென பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் திடீரென தனது மனைவிக்கும், மகன் மற்றும் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்தார். இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர், ரமேஷ் குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையில் குடும்ப ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ரமேஷ் குடும்பத்துக்கு இப்படியொரு கதியா என அவர் வசித்த பகுதியில் உள்ள மக்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்