இலங்கையில் விசா முடிவடைந்தபிறகு சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 பேர் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையில் விசா காலம் முடிவடைந்த பிறகு சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகமவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 49 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிவடைந்த பின்னும் தங்கியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிரியா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 24 பேரை கடந்த மாதம் இலங்கை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்