பிரதமர் மோடி மீது பேரன்பு... திருமணம் செய்த இளம் ஜோடி: தற்கொலை செய்யப்போவதாக புதுமணப்பெண் புகார்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்ட பேரன்பு காரணமாக திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள் இருவர் தற்போது விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் நாங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தோம் என இவர்கள் இருவரும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் பலரது கவனதையும் ஈர்த்திருந்தது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் ஜய் தேவ் என்ற இளைஞர் பிரதமர் நரேந்திர மோடியை அதரித்து கருத்து பதிந்துள்ளார்.

இந்த கருத்தை முதன் முதலில் ஆதரித்து பதிவிட்டவர் அல்பிகா பாண்டே என்ற இளம்பெண்.

இதனையடுத்து நெருங்கி பழகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

இத்தகவலை இருவரும் புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டு பின்னர் சில மணி நேரத்தில் நீக்கவும் செய்தனர்.

இந்த நிலையில் அல்பிகா பாண்டே பிரதமர் மோடியின் ஆதரவாளரை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எதிராக அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

உளவியல் ரீதியாகவும் உடலளவிலும் தம்மை அவர்கள் சித்திரவதை செய்வதாக கூறும் அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தம்மை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers