கையேந்திய முன்னாள் ராணுவ வீரர்: கண்ணீர் வடித்த கவுதம் காம்பீர்

Report Print Arbin Arbin in இந்தியா

ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரரின் சிகிச்சைக்கு உதவுமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் குரல் கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான காம்பீர் வாய்ப்பு அமையும்போதெல்லாம் தன்னுடைய நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தக் கூடியவர்.

இந்நிலையில், ‘ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சிகிச்சைக்கு உதவுங்கள்’ என காம்பீர் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

அதில், ‘இவர்தான் பீதாம்பரன். இந்திய ராணுவத்தில் 1965 மற்றும் 1971 போர்களில் பணியாற்றியுள்ளார்.

இவரது அடையாள அட்டை மூலம் ராணுவ வீரர் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்திய ராணுவத்தை அணுகி அவரால் உதவியை பெற முடியவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மட்டுமின்றி டுவிட்டர் மூலம் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் காம்பீர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, காம்பீரின் கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு அமைச்சகம் உனடியாக பதில் அளித்தது.

“ராணுவ வீரருக்காக குரல் கொடுத்த உங்களை பாராட்டுகிறோம். அவருக்கு உரிய உதவிகள் முழுமையாக அளிக்கப்படும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீதாம்பரனுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ராஜ்ய சைனிக் வாரியத்தில் இருந்து நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers