விமானத்தை அண்ணாந்து பார்த்தவர்கள் அதில் பயணம் செய்த அற்புத தருணம்! ஏற்பாடு செய்த மாமனிதர் யார்?

Report Print Raju Raju in இந்தியா

தன்னுடையை கிராமத்தில் வசிக்கும் 120 முதியவர்களை இலவசமாக விமானத்தில் ஏற்றி சென்று நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார் ஒரு மாமனிதர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது தேவராயன்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில் செய்துவருகிறார்.

இவர், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் ஏற்றி பயணம் செய்யவைத்து ரசிக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார்.

அதன்படி தன் கிராமத்தைச் சேர்ந்த 120 முதியவர்களை இன்றைய தினம் கோவை - சென்னை விமானத்தில் பறக்கவைத்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

முதியவர்கள் அனைவரும் இரு தினங்கள் சென்னையை சுற்றிபார்த்த பின்னர் நாளை மறுநாள் தேவராயன்பாளையத்துக்கு திரும்ப இருக்கிறார்கள்

இது குறித்து ரவிக்குமார் கூறுகையில், வாழ்நாள் முழுக்க எங்களின் கிராமத்திலேயே இருந்து, ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஒரு நாளாவது விமானத்தில் ஏற்றி அழகுபார்க்க வேண்டும் என விரும்பினேன்.

அந்தக் கனவு தற்போது தான் நிறைவேறியிருக்கிறது.

இன்று, அவர்களை எல்லாம் விமானத்தில் ஏற்றி இருக்கைகளில் அமர வைத்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷம், அத்தனை பெரியது

விமானத்தில் ஏறி அமர்ந்து சென்னை சென்றடையும் வரை அனைவருமே குழந்தைகளாகிப் போனோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்