மயக்க ஊசி போட்டு சிறுமியை உதவியாளருடன் சேர்ந்து சீரழித்த முதியவர்: தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

மயக்க ஊசி செலுத்தி எல்.கே.ஜி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைதான பள்ளி பஸ் டிரைவர்-உதவியாளர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் பள்ளி உள்ளது. இங்கு பிரி.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை உள்ளது. காரமடை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி பஸ்களில் தான் வருவார்கள். இந்த பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமி பள்ளி பஸ்சில் வைத்தே மயக்கி ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் பொலிலில் புகார் அளித்தனர். அதில் பள்ளி பஸ்சின் டிரைவர் மற்று அவரது உதவியாளர் தான் தங்களது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தனர்.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொந்தரவு செய்தது பள்ளி பஸ் டிரைவர் கோவிந்தராஜ் (37), அவரது உதவியாளர் மாரிமுத்து. (55) என்பது தெரிய வந்தது.

இருவரையும் பொலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தினமும் பள்ளி பஸ்சில் வரும் சிறுமி மற்ற மாணவிகள் இறங்கிய பின்னர் கடைசியில் தான் தனது வீட்டிற்கு இறங்கி செல்வார். இதனை பயன்படுத்தி தான் சிறுமியை பஸ் டிரைவர்-உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட கோவிந்த ராஜ், மாரிமுத்து ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers