துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமி... அலறிய குடும்பத்தார்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தின் தம்தரி கிராமத்தை சேர்ந்தவர் மேகா விஸ்வகர்மா (17). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மேகாவின் குடும்பத்தார் அவரை தனியாக வீட்டில் விட்டு வெளியில் சென்றனர்.

பின்னர் சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உள்ளே தொலைக்காட்சி அதிக சத்தத்துடன் ஓடி கொண்டிருந்தது.

இதையடுத்து ஜன்னலை மேகாவின் குடும்பத்தார் திறந்த போது துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மேகா சடலமாக தொங்கினார்.

இதை பார்த்த அவர்கள் அலறி துடித்தார்கள். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து மேகாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers