நள்ளிரவில் வீட்டு கதவை திறந்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! கணவருக்கு நேர்ந்த சோகம்: பரபரப்பு பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சொத்து பிரச்னை காரணமாக சொந்த தங்கை மற்றும் தங்கையின் கணவரை வெட்டி கொலைச் செய்த அண்ணனை பொலிசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (50).

இவரது மனைவி கல்யாணி (38), மகள் ராமலட்சுமி(15). இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ வீட்டு கதவை தட்டிய நிலையில் கல்யாணி திறந்தார்.

அப்போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல் முத்து, அவரது மனைவி கல்யாணி மற்றும் மகள் ராமலட்சுமி ஆகியோரை கண்மூடிதனமாக வெட்டினார்கள்.

இதில் கல்யாணி வீட்டிலேயே பரிதாபமாக பலியானார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் முத்து உயிரிழந்தார். அவரது மகள் ராமலட்சுமி படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரனை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, சொத்து பங்குவைப்பது சம்பந்தமாக கல்யாணிக்கும் அவரது உடன்பிறந்த அண்ணன் சுடலையாண்டிக்கும் பிரச்னை இருந்துவந்துள்ளது.

இதில் கல்யாணி சமாதானமாக. சென்றுள்ளார். ஆனால் சுடலையாண்டியின் சேர்க்கை சரியில்லாததால் கூலிப்படை உதவியுடன் இந்த கொலையை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் சுடலையாண்டி தலைமறைவாக இருப்பதாகவும், சந்தேகத்தின்பேரில் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருவதாகவும் பொலிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers