15 ஆண்களை மயக்கிய பெண்....வெளிநாட்டு தமிழ் ஆண்களுக்கு குறி: கூகுளில் ஹாட் டாப்பிக்கான மகாலட்சுமி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்மணி 15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அவரது 16-வது கணவர் பொலிசில் புகார் அளித்திருப்பதுதான் கூகுள் மூலம் ஹாட் டாபிக்காயிருக்கிறார் மகாலட்சுமி,

பல்வேறு பெருமைகளை கொண்ட திருச்சியை இன்று கூகுளில் தேடினால் முதல் டாப்பிக்காக வருவது இந்த மகாலட்சுமிதான்.

மன்னார்குடியை சேர்ந்த உதயக்குமார் என்பவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் ஒன்லைன் இணையதளம் வாயிலாக மகாலட்சுமியை பெண் பார்த்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

கணவர் வெளிநாட்டிற்கு சென்றவுடன் அவர் அனுப்பும் பணத்தை வைத்து நன்றாக ஆட்டம் போட்டுள்ளார் இந்த மகாலட்சுமி.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதனை ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். இவரின் குறிக்கோள் ஆடம்பரமாக ஆண்களுடன் வாழ்வது, நன்றாக ஊர் சுற்றுவதுதான்.

இதுவரை 15 ஆண்களை ஏமாற்றியுள்ள நிலையில், இவர் குறிவைக்கும் ஆண்கள் சிங்கப்பூரை சேர்ந்த தமிழர்கள்தான். இணையதளத்தில் தனது அழகிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து, அதன் மூலம் வெளிநாட்டு ஆண்களுக்கு வலைவிரித்துள்ளார்.

தற்போது இவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers