நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்: துபாய் வழியாக தனி விமானத்தில் வருகிறது தமிழரின் சடலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடந்த 21-ம் தேதி ரஷ்யக் கடல் பகுதி எல்லையான கெர்ச் வளைகுடாவில் தான்சானியாவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

நடுக்கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிவாயு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு கப்பலில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ மற்றொரு கப்பலுக்கும் பரவியதில், அதில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர்.

6 பேர் இந்தியர்கள் மற்றும் 4 பேர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார். இதில் மீட்கப்பட்ட இந்தியர்களின் சடலங்கள் மாஸ்கோவில் இருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

துபாயில் இருந்து தனி விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் உடலும் தமிழகம் வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்