காதல் கணவரை தீர்த்து கட்டிய மனைவி: 1 ஆண்டுக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஓராண்டுக்கு பிறகு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டிட வேலை செய்த போது அதே பகுதியை சேர்ந்த ரேவதியை, மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி இளஞ்செழியன் கடந்த 2012ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்தார்.

தஞ்சாவூரில் இருவரும் வசித்து வந்த நிலையில், இளஞ்செழியனின் நண்பர் இளவழகனுடன் ரேவதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதை இளஞ்செழியன் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதம், இளஞ்செழியனை காணவில்லை.

இதுகுறித்து அவரின் தாய் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து, பொலிசார் இவ்வழக்கை தீவிரப்படுத்தினர்.

ரேவதியிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், அவருடைய தூண்டுதலின் பேரில் கள்ளக்காதலன் இளவழகன், ஆட்டோ டிரைவர் மணி, இளவழகனின் நண்பர் கலியபெருமாள் ஆகியோர் இளஞ்செழியனை கொலை செய்ததும், உடலை அங்குள்ள கால்வாய் குழாயில் போட்டதும் தெரியவந்தது.

ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் வீசப்பட்டதால், அது எலும்பு கூடாகி இருந்தது.

அதை மீட்ட பொலிசார் ரேவதி, இளவழகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்