சென்னை விமான நிலையத்தில் சிறுத்தைக்குட்டியுடன் சுற்றிதிரிந்த வெளிநாட்டு பெண்.. அதிர்ந்த பயணிகள்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை விமான நிலையத்தில் சிறுத்தைக்குட்டியுடன் அங்குமிங்கும் சுற்றிதிரிந்த தாய்லாந்து பெண்ணை விமான நிலைய அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

தாய்லாந்தை சேர்ந்த பெண்ணொருவர் சென்னைக்கு விமானத்தில் வந்த நிலையில் கையில் சிறுத்தைக்குட்டி ஒன்றை வைத்திருந்தார்.

அதை வைத்து கொண்டு அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது தாய்லாந்து பெண் பையில் சிறுத்தைக்குட்டியை வைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த பெண்ணை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப பணிகள் நடைபெற்று வருகின்றது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்