மனம் மாறிவிடக்கூடாது: கமல்ஹாசன் பட பாணியில் உயிரை விட்ட இளம் ஜோடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவை சேர்ந்த இளம் காதல் ஜோடி கடைசி நேரத்தில் மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு பேரும் தங்கது உடலை துப்பட்டாவில் கட்டிக்கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

கேரளாவை சேர்ந்த அமல் குமார் மற்றும் சூர்யா நாயர் ஆகிய இருவரும் கல்லூரியி முதலாமாண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, சென்னைக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அந்த முடிவை கைவிட்டு கோயம்புத்தூர் சென்றுள்ளனர். அங்கு பேசிக்கொண்டிருந்த இவர்கள், இருவரும் ஒன்றாக சேர்ந்து இறந்துவிடலாம் என முடிவு செய்தனர். பின்னர் கடைசி நேரத்தில் மனம் மாறிவிடக்கூடாது என கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்பட பாணியில் ஒன்றாக சேர்ந்து இறந்துவிடுவோம் என முடிவு செய்து இருவரும் தங்களது உடலை துப்பட்டாவில் கட்டிக்கொண்டு ரயி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்களது அடையாள அட்டையை வைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்