வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி நபர் செய்த செயல்! ஆத்திரத்தில் இளைஞர்கள் வெறிச்செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அடுத்த கிளியனூரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் கடந்த மாதம் 21-ஆம் திகதி மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அவர் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் குற்றவாளியை பிடிப்பதற்காக பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முதலில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை கண்டு பிடித்த பொலிசார், அதன் பின், பாண்டிச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, சீனிவாசன் அவரது நண்பர்கள் சரவணன், சக்திவேல், மாறன் ஆகியோர் இந்த கொலையை சேர்ந்து செய்தது தெரியவந்தது.

மேலும் ரபீக் டிராவல் ஏஜென்சி நடத்தி வருவதால், இவர்களை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 9 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

ஆனால் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால், இந்த கொலை நடந்துள்ளது.

கைது செய்த சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார், அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்