இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தம்பியின் நிறுவனம் திவால்

Report Print Raju Raju in இந்தியா

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானிக்கு சொந்தமானது ரிலையன்ஸ் நிறுவனம்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந் திகதி முடிவு செய்யப்பட்டது. 18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை.

இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு சிறிதளவு கூட திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், இதுபற்றி கம்பெனியின் இயக்குனர்கள் குழு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.

அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுதான், நிர்ணயிக்கப்பட்ட 270 நாட்கள் கால அளவுக்குள் விரைவான கடன் தீர்வுக்கு உகந்த வழிமுறை ஆகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers